Sunday, November 8, 2026

வானவில்

நீயற்ற என் 

வானத்தில் 

நிறமற்று 

நிற்கிறது 

வானவில்..!

Saturday, November 7, 2026

மழை மட்டும் என்னோடு.

நேற்று பெய்த மழை தேங்கி நிற்க
அதில் குதித்து மற்றவர்மேல் சேறடித்தது..

அப்போதுதான் அமர்ந்த 
ஆசிரியர் 
வேகமாக ஓடும்படி
மழை ஓய்ந்த பின் மரமாட்டி
ரசித்தது..

வீட்டுப்பாடம் செய்யாமல் 
அடிவாங்கி வகுப்பிற்கு வெளியே 
அழுதோய்ந்து 
நிற்கும்போது
மழை சட்டை 
நனைத்தது..

இவையாவிலும் என்னோடு நின்ற 
நண்பர்கள் எங்கெங்கோ இருக்க..

மழை மட்டும் என்னோடு..








கண்ணா..!

அப்போதெல்லாம் 

நீ என்னை 

அழைத்திடுவாய்..

இப்போது 

நான் அழைக்கிறேன் 

எல்லோரையும்..

கண்ணா..!

பெருமழை

தனிமையை விரும்பிய 

என்னிடம்

வாய் திறவாமல் 

பேசிவிட்டு போனது

அந்த

பெருமழை!

எப்போது திரும்பும்?

மழை வெயில் அறியாமல் 

கைகோர்த்து நெடுந்தூர நடை 

நேரம் தெரியாமல் கதை 

பல சினிமாக்கள் 

சில கவிதைகள் 

என்று யாதொரு கவலையும் இன்றி 

அழகாக கழிந்த 

முன்பொருநாட்கள் 

எப்போது திரும்பும் 

மீண்டும்..

Friday, March 29, 2024

கவிதை

 நீலவானம்

பௌர்ணமி நிலவு

மெல்லிய காற்று

ஓயாத அலை...

என்னருகில் 

நீ..

உன்னருகில் 

நான்..

கைகோர்த்தபடி 

மௌனப்பார்வையில் 

பேசிக்கொள்ளும் 

இத்தருணமும் 

ஒரு 

கவிதையே..!


எழுத்துக்கள்

 நீ பரிசளித்த பேனாக்கள் யாவும்

உன்னை பற்றி எழுத சொல்லும்... 

மூடியை திறந்த

மறுகணம்

உன்வாசனை 

எனது எழுத்துக்களில்..!