எப்போதும் எழுதும் நிலையில் இருந்து
எப்போதாவது எழுதும் நிலைக்கு
வாழ்க்கை என்னை தள்ளிய இந்த சூழலில்...
எப்போது எழுதுவாய் என்று கேட்ட
ஒரு குரலுக்கு
இவ்வெழுத்துக்களை சமர்ப்பிக்கிறேன்...!
----------------------------------------------------------
முரண்பட்ட ஒரு சூழலில்
வாழும் இத்தருணத்தில்
வார்த்தைகள் சட்டென்று
வரிசைகட்டி வந்துவிடுவதில்லை..!
எழுத நினைத்த மறுநொடி
ஏதேதோ எண்ணங்கள்
ஏதேதோ யோசனைகள்
கடந்தகாலங்கள்
கண்முன்னே..!
மனதளவில் ரசிகை நீ (நீங்கள்)
தந்த வரம்..!
மறந்து
கடந்த
யாவையும்
மறுமுறை
மீண்டும் எழுத
என்னை உந்தித்தள்ளுகிறது..
மிக்க நன்றி..!
எழுத்துக்கள் தொடரும்... இனி வாரம் ஒருமுறையேனும்..!