Friday, July 6, 2012

நம்பிக்கை...!

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுத நினைக்கிறேன்..!
உன்னை நினைத்துக்கொண்டு இருப்பதால்..!!

எத்தனை தூரமாய் நீ இருந்தாலும்..
இத்தனை அருகினில் உன்னை காட்டும் எந்தன் இதயத்தை 
நான் என்னவென்று சொல்லுவேன்..!

ஆயிரம் கடமைகள் தலைக்குமேல்..!
கவலைகளோ அதற்க்குமேல்...!
நினைத்தாலே கண்ணீர் துளிகள் அருவியாய் கொட்டும் 
இச்சூழலிலும்...
உன் நினைவுகள்..
ஆனந்த பூங்காற்றாய்..
என்னை வருடிச்செல்லும்...!!

முடிவெடுக்கும் தருணம்...
காத்திருக்கிறேன்...!!

இப்போதும் புரியவில்லை என்ன செய்ய போகிறேன் என்று..
கடவுளை மட்டுமே நம்பி காலத்தை கழிக்கிறேன்..


என்னையும் முழுதாய் நம்பிக்கொண்டே..!!

No comments:

Post a Comment